Wednesday, June 3, 2009

ஈழம் - இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு

வணக்கம்

தமிழிழ நாடு அமைவதற்கு இலங்கையை தவிர்து, சில உலக நாடுகளும் தடையாக இருகின்றன. குறிப்பாக ராணுவ வைறிகளான இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழிழம் அமைவதை தடுக்கவும், ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கவும், சிங்கள இனவாத அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கின்றன.

ஈழத்திற்கு எதிராக இவ்விரு நாடுகளும் கடுமையாகவும், மனிதாபிமானமற்று நடக்க என்ன காரணம்??

என் மனதுக்கு பட்டவை சில

இந்தியா

1. இந்திய முன்னால் பிரதமர், ராஜீவ் காந்தியின் படுகொலை. இச்சம்பவம் ஈழத்தின் மீதான இந்திய அனுகுமுறை கடுமையாக மாற ஒரு முக்கிய காரணம். இந்த ஒரு உயிருக்கு விலையாக ஈழத்தில் பல உயிர்கள் மடிந்தும், தற்போது இந்தியாவை ஆளும் காங்கரஸின் பலி வாங்கும் படலம் இன்னும் முடியவில்லை. இலங்கை சிங்கள அரசின் வெறி செயலுக்கு பக்க பலமாக காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

ஈழத்தமிழனின் உதிரத்தை சிங்கள மிருகத்தோடு இந்தியாவும் பகிர்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றது. இக்கொடுமையை தடுக்க முடியாதது தமிழக அரசின் கையாலாகாதனம்.வேட்ககேடான விஷயம்.

2. இலங்கையில் ஈழத்தை அங்கீகரித்தால், காஷ்மீர் பிரிவினை கோரும் குழுக்களுக்கு சாதகமாக அமையலாம். இக்காரணத்தினால்கூட இந்தியா ஈழத்தை அங்கீகரிக்க மறுக்கலாம்


சீனா

1. திபேத்தையும் தைவானையும் அங்கீகரிக்க மறுக்கும் சீனா, ஈழத்தையா ஏற்றுக்கொள்ள போகிறது!?.

2. இந்தியாவின் ராணுவ வைரியான சீனா, இலங்கைக்கு ஆதரவளிப்பதின் மூலம், அங்கு தனது ராணுவ தளங்களை ஏற்பதுத்த முடியும். இது இந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அவையும்.
இலங்கைக்கு பாகிஸ்தானின் உதவிகள் கூட இதை மனத்தில் கொண்டுதான்.


தமிழிழம் அமைவது உண்மையில் இந்தியாவிற்கு பெரும் நன்மையை தரும். இந்திய தேசத்தின் பாதுகாபிற்கு தெற்க்கில் ஈழ தேசிய ராணுவம் நிச்சயம் துணைபுரியும்.

சிந்திக்குமா இந்தியா?