Tuesday, September 15, 2009

ஆயிரத்தில் ஒருவன்

இப்பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
பண்டய தஞ்சையில் (சோழ மண்டலம்) நடைபெற்ற சில நிகழ்வுகளை சித்தரிக்கும் இப்பாடல்கள், வரிகளை உற்றுநோக்கினால், தற்போதைய தமிழிழ துயரங்களுக்கும் பொறுந்தும்.



"புலிகொடி பொறித்த சோழ (ஈழ) மாந்தர்கள், எலி கறி பொரிப்பதுவோ"

----------------------------------------------------------------

நெஞ்சை உருக்கும் காட்சிகள்


-----------------------------------------------------------------------


Wednesday, September 9, 2009

அடிமடையர்கள்

வணக்கம்,

சில வேளை பழு காரணமாக இப்பதிப்பை சற்று கால தாமதமாக பதிக்க வேண்டியதாயிற்று.


அன்மையில் அனைவரது கவணத்தையீர்த விவகாரங்கள், அடிமடையர்களின் மாட்டுத்தலை ஊர்வலம், Teo மரண விசாரனை மற்றும் KG Buah Pala நில விவகாரம்.

Teo வின் விவகாரம் நீதி விசாரணையிலிப்பதால், இப்பொது கருத்துரைக்க விரும்பவில்லை.


அடிமடையர்களின் அணிவகுப்பு

அன்மையில் seksyen 23ல் கோவில் இடமாற்ற விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதியில் குடியிருக்கும் சிலரும், குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலரும், மாநில செயலகத்திற்கு ஊர்வலம் சென்றனர். அவர்களின் ஊர்வல நோக்கம், 80% முஸ்லிம் மலாய்காரர்கள் குடியிருக்கும் Seksyen 23 ற்கு, Seksyen 19ல்லிருந்து இடமாற்றம் கான, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலுக்கு மாநில அரசாங்க்கம் நிலம் வழங்கியதற்கு எதிற்பு தெரிவிப்பதெயாகும்.

இவர்களது எதிர்ப்பின் காரணம் ஒரு வகையில் ஏற்புடையதாகவே இருக்கலாம், ஆனால் எதிர்ப்பை வெளிக்காட்டிய முறை, இவர்கள் அடிப்படை நாகரீகமில்லாத அடிமுட்டாள்கள் என்பதையே காட்டுகிண்றது.

பசுமாடு இந்துக்களால் புனிதமாக மதிக்கப்படும் ஒரு மிருகம்.இக்கோவில் விவகாரத்தில் இந்துக்களின் உணர்சிகளை புண்படுத்தும் நோக்கிலேயே இம்மடையர்கள் செயல்பட்டிருகின்றனர்.

மற்ற இனத்தவர்களை அவமதிப்பதை இஸ்லாம் மதமும், உண்மையான மலாய் பாரம்பரியமும் அனுமதிக்காது என்று நமது பிரதமர் உட்பட பல இஸ்லாமிய மலாய் தலைவர்கள் கருத்துக்கூறியிருக்கின்றனர்.

ஆக, ஊர்வலம் சென்ற இம்மடையர்கள், இந்து மதத்தை மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த மதத்தையும் அவமானப்படுத்தியிருக்கின்றனர்.


ஆலய இடமாற்ற விவகாரத்தில், தற்போதய மக்கள் கூட்டணி மாநில அரசை குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை. முந்தய கையாலாகாத மாநில அரசின் குறைகளை தற்போதய அரசாங்க்கம் சரி படுத்த முயற்சிக்கின்றது.இது முந்தய ஆட்சியிலிருந்த பிரதான கட்சியிலுல்ல அரைவேக்காடுகளுக்கு பொருக்கவில்லை. அதன் பிரதிபலிப்பே இந்த அடிமடையர் ஊர்வலம்.

ஒரு கோவிலினால் (KG JAWA) ஆட்சியிலந்த அனுபவத்தை இம்மடையர்கள் மறந்துவிட்டார்கள் போலும். இவர்கள் சார்ந்த கட்சியின் தேசிய தலைவராம், நமது பிரதமரின் ஒரே மலேசியா (1 Malaysia) கொள்கையை இவர்களே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.

தற்போதைய மக்கள் கூட்டணி மாநில அரசாங்கம், இவ்விவகாரத்திற்கு நல்ல தீர்வை கண்டிருக்கின்றது. 23ற்கு பதிலாக, 22ற்கு இடமாற்றம் செய்ய, நிலம் அடயாளம் காணப்பட்டுள்ளது.

ஊர்வலம் சென்ற அடிமடையர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, அனைவருக்கும் படிப்பினையாக அமையட்டும்.

சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் இவ்விரு விவகாரங்களில் எனக்கு ஒன்று புலப்படுகின்றது. இம்மாநிலங்களை ஆளும் மக்கள் கூட்டணிக்கு அவப்பெயரை உண்டாக்கவும், ஆட்சியாலர்களுக்கு தலைவலியை உண்டாக்கவும், முந்தய தேசியமுன்னனி அரசாங்க உறுப்புக்கட்சிகள் ஆடும் மூன்றாம் தர அரசியல் விளையாட்டுகள் அரங்கேரிக்கொண்டிருக்கின்றன.

பேராவில் நடந்த பின்வாசல் திருட்டுத்தனம், இங்கேயும் நடக்கலாம்.

முன்பு 'பிள்ளையை' கில்லியவர்கள், இன்று 'தொட்டிலை' ஆட்டுகின்றனர்.